11 ஜூலை, 2008

Easy கோதுமை ஹல்வா (Easy wheat Halwa)

நேற்று யாருக்காவது அல்வா கொடுக்க வேண்டும் போலிருக்க, ஆரம்பித்தேன் அல்வா கடையை... என்ன அல்வா பண்ணலாம் என்று யோசித்து சஞ்ஜீவ் கபூர் ரெசிபிஸ் எல்லாம் பார்த்தால் எல்லாவற்றிலும் மாவா கோயா என்று ஏதோ எழுதியிருந்தார். அதேல்லாம் எங்கே போய் தேடுவது? சரி நம் பாரம்பரிய கோதுமை அல்வாவையே கிளறி விடுவோம் என்று புக்கை பார்த்தால் ஏதோ பால் எடுத்து செய்ய சொல்லியிருந்தார்கள். அதற்கு ஊற வைத்து அரைத்து.... நம்மால் முடியாதப்பா. ஆனால் ஸ்வீட் டூத்தை கண்ட்ரோல் பண்ணுவது எப்படி.... இதோ ஒரு ரெடிமேட் அல்வா........

தேவை:
கோதுமை மாவு 1 கப்
பால் 2 கரண்டி
கேசரி பௌடர் கொஞ்சம்
நெய் 1 கப்
சர்க்கரை 1 1/2 கப் (தேவையானால் 2 கப்)
கிளற கொஞ்சம் பொறுமை....

செய்ய:
1.கோதுமை மாவில் கேசரி பௌடர் போட்டு, பாலில் நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
2.சர்க்கரை மூழ்கும் அளவிற்கு நீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். இளம் பாகு வர வேண்டும். அதாவது நீரில் கை நனைத்து பாகை தொட்டு பார்த்தால் நூல் போல வர வேண்டும்.
3.கரைத்து வைத்துள்ள கோதுமை மாவை மெதுவாக ஊற்றி கிளற வேண்டும்.
4.நான் ஸ்டிக் பாத்திரம் மிகவும் சௌகரியம்.
5.கொஞ்சம் கெட்டியானதும் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளற வேண்டும்.
6.சுமார் 35 நிமிடத்தில் நெய் வெளிவிட ஆரம்பிக்கும்.
7.வேறு நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி ஸ்லைஸ் செய்யலாம். அதே பாத்திரத்தில் வைத்திருந்தால் பர்ஃபி ஆகி விடும்..